தனக்கு மாத்திரமல்ல சந்திரிக்காவிற்கும் முடியும்

பிணை முறி விநியோக மோசடி குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரதமர், அதுதொடர்பில் நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பை வெளியிட்ட போதும், தமக்கு அவ்வாறான அவசியம் இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிணை முறி மோசடி அறிக்கை குறித்து கடந்த தினம் இடம்பெற்ற விசேட நாடாளுமன்ற அமர்வின் போது, 2008ம் ஆண்டு இடம்பெற்ற பாரிய ஊழல் தொடர்பில் மகிந்த ராஜபக்ஷ விளக்கமளிக்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறி இருந்தார்.

இதுதொடர்பில் எமது செய்திப்பிரிவு, நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவை வினவிய போது, இந்த குற்றச்சாட்டு விசாரணைகள் மூலம் நிரூபிக்க முடியாதவை என்று கூறியுள்ளார்.

தமக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இருந்தால் மாத்திரமே தமக்கு நாடாளுமன்றத்தில் விசேட விளக்கத்தை வழங்க வேண்டி இருக்கும்.

ஆனால் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த குற்றச்சாட்டுகள் அரசியல் ரீதியானவை.

அவற்றுக்கு பதில் வழங்க வேண்டிதயில்லை என்று மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

அதேநேரம் குறித்த விசேட நாடாளுமன்ற அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடந்துக் கொண்ட விதம் குறித்து தாம் மெய்யாகவே அதிருப்தி கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையாக கருத்தைக் கோருவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்றும் தம்மிடம் சிலர் கருத்து கோரியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐந்து வருடத்தை ஆறு வருடங்களாக நீடிப்பது 19 ஆவது திருத்தச் சட்டத்தில் அவருக்கு தாக்கம் செலுத்தாவிட்டால், தமக்கும் அது தாக்கம் செலுத்தாது என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதாவது, எதிர்காலத்தில் இரண்டு தடவைகள் போட்டியிடுபவர்களுக்கே இது தாக்கம் செலுத்தும்.

அரசியலமைப்பு அமைய, ஐந்து ஆண்டுகளே பதவி காலம் எனத் தமக்குத் தெரிந்தளவில் தாம் நம்பிக்கை கொள்வதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதனை ஆறு ஆண்டுகள் என உயர்நீதிமன்றம் விளக்கம் வழங்குமாயின் அது தமக்கு பிரச்சினை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏனெனில், மீண்டும் ஒருமுறை தேர்தலில் போட்டியிட தமக்கு மட்டுமல்ல சந்திரகாவுக்கும் முடியும் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.