கொலை சம்பவம் தொடர்பில் 2 பேர் கைது

கிராண்ட்பாஸ் - நாகலகம் வீதி பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்துக்குரிய இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய வெள்ளம்பிட்டிய ஜுட் என்பனவரின் உதவியாளர்களே நேற்று கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கைத்துப்பாக்கி ஒன்றும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த 2ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட குறித்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்.

அத்துடன், மூன்று பேர் காயமடைந்தநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று கைதுசெய்யப்பட்ட இரண்டு பேர், வெள்ளம்பிட்டி பகுதியை சேர்ந்தவர்களாவர்.