இரவு வேளை நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை

புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக பலபிட்டி வரையான கடற்பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

அந்த கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 80 கிலோ மீட்டர்வரை அதிகரித்து வீசக்கூடும் என அந்த நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதனுடன் இன்று மற்றும் நாளையும் நாட்டில் மழையுடனான காலநிலை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரவு நேரத்தில் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.