மைத்திரியின் அதிரடிகள்...

ஊழல், மோச­டி­க­ளில் ஈடு­பட்டு அரச சொத்­துக்­க­ளுக்­கும் உடைமை­க­ளுக்­கும் இழப்பை ஏற்­ப­டுத்­தும் சக­ல­ருக்­கும் அர­சி­யல் கட்சி, பதவி வேறு­பா­டு­க­ளின்றி உயர்ந்­த­பட்ச தண்­டனை வழங்­கு­வ­தற்­கான பின்­னணி உரு­வாக்­கப்­ப­டும் என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன வலி­யு­றுத்­தி­னார்.

பொலன்­ன­றுவை, திய­சென்­புர பிர­தே­சத்­தில் இடம்­பெற்ற மக்­கள் சந்­திப்­பின்­போதே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

எதிர்­வ­ரும் உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் வெற்­றி­ பெ­றும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் எந்­த­வொரு மக்­கள் பிர­தி­நி­தி­யும் தவ­றி­ழைப்­ப­தற்கு நான் வாய்ப்­ப­ளிக்­கப்­போ­தில்லை.

தவ­றி­ழைக்­கும் அனை­வ­ருக்­கும் எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு உயர்ந்­த­பட்ச தண்­ட­னையை வழங்க கட்­சி­யின் தலை­வர் என்­ற­வ­கை­யில் தயக்­க­மின்றி செயற்­ப­ட­வுள்­ளேன்.

ஊழல், மோச­டி­க­ளின்றி மக்­களை நேசிக்­கும் உண்­மை­யான மக்­கள் பிர­தி­நி­தி­களை உரு­வாக்க உறு­தி­யு­டன் செயற்­ப­டு­வேன்.

மக்­க­ளுக்கு வழங்­கும் வாக்­கு­று­தி­களை அந்த வண்­ணமே நிறை­வேற்­று­வ­தற்­கான தீர்­மா­னங்­களை மேற்­கொள்­ளும் வகை­யில் கடந்த மூன்று ஆண்­டு­க­ளா­கச் செயற்­பட்­டுள்­ளேன். விவ­சா­யி­க­ளின் பிரச்­சி­னையைத் தீர்த்து, அவர்­க­ளது தேவை­களை நிறை­வேற்றி வைக்க முடிந்­தமை குறித்து நான் மகிழ்ச்­சி­ய­டை­கின்­றேன்.

2012ஆம் ஆண்­டின் உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல் காலத்­தில் வறட்­சி­யால் பாதிக்­கப்­பட்ட வட­மத்­திய மாகாண மக்­க­ளுக்கு துரித நிவா­ர­ணங்­களை வழங்­கு­வ­தாக அப்­போ­தைய அரசு பல வாக்­கு­று­தி­களை வழங்­கி­ய­போ­தும் தேர்­த­லின் பின்­னர் அந்த மக்­க­ளுக்­காக எந்­த­வொரு உத­வி­யை­யும் வழங்­க­வில்லை என்­றார்.