மாவிட்­ட­பு­ரம் குருக்­கள் விடயத்தில் பொலிசார் பக்கச்சார்புடன்

மாவிட்­ட­பு­ரம் கந்­த­சு­வாமி ஆல­யச் சுற்­றா­ட­லில் தேர்­தல் அறிக்கை வெளி­யிட்ட விவ­கா­ரத்­தில் பொலி­ஸார் விட­யத்தை திசை திருப்­பும் வகை­யில் செயற்­ப­டு­கின்­ற­னர் என்று யாழ்ப்­பாண மாவட்­டச் செய­லக தேர்­தல்­கள் அலு­வ­ல­கத்­தில் நேற்று முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. தேர்­தல்­கள் ஆணை­யா­ள­ருக்­கும் முறை­யி­டப்­பட் டுள்ளது.

மாவிட்­ட­பு­ரம் கந்­த­சு­வாமி ஆல­யச் சுற்­றா­ட­லில் கடந்த டிசெம்­பர் மாதம் 30ஆம் திகதி அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் கட்­சி­யில் போட்­டி­யி­டும் தமிழ் சம உரிமை இயக்­கம் தேர்­தல் அறிக்­கையை வெளி­யிட்­டது. தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வுக்கு இது தொடர்­பில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

பொலி­ஸார் இது தொடர்­பில் விசா­ரணை நடத்­தி­னர். மாவிட்­ட­பு­ரம் கந்­த­சு­வாமி ஆலய குருக்­களை மல்­லா­கம் நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தி­னர்.

நீதி­மன்று அவ­ருக்கு தேர்­தல் விதி­முறை மீறல் தொடர்­பில் எடுத்­து­ரைத்­தது.

எனி­னும் பொலி­ஸார் இந்த விட­யத்­தில் அர­சி­யல்­வா­தி­க­ளைக் காப்­பாற்­றும் நோக்­கு­டன் செயற்­பட்­டுள்­ள­னர் என்று நேற்று முறைப்­பாடு மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

தேர்­தல் அறிக்கை வெளி­யீட்­டில் கலந்து கொண்ட அர­சி­யல்­வா­தி­கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கா­மல், விட­யத்தை திசை திருப்­பும் வகை­யில் ஆல­யக் குருக்­களை மன்­றில் முற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளார் என்று மாவட்ட தேர்­தல்­கள் திணைக்­க­ளத்­தி­டம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள முறைப்­பாட்­டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பில் உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டும் என்று கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.