சர்வாதிகாரியாக ரணில்! விசாரணைக்கு தயார்

2008ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்­டுவ ரையான காலப் பகு­தி­யில் எமது ஆட்­சி­யின்­போது விநி­யோ­கிக்­கப்­பட்ட பிணை­மு­றி­க­ளில் மோச­டி­கள் இடம்­பெற்­றி­ருப்­பதை அரச தலை­வர் ஆணைக்­குழு உறு­திப்­ப­டுத்­தி­யி­ருந்­தால் அது தொடர்­பில் விசா­ர­ணை­கள் நடக்­கட்­டும்.

விசா­ர­ணை­க­ளுக்கு முகம்­கொ­டுக்க நாம் தயா­ரா­கவே இருக்­கின்­றோம். எமது அதி­கா­ரி­கள் மீது நம்­பிக்­கை­யும் இருக்­கின்­றது. இவ்­வாறு முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­தார்.

பி.பி.சி. சிங்­கள சேவைக்கு வழங்­கிய செவ்­வி­யில் அவர் மேலும் கூறி­யுள்­ள ­தா­வது, அரச தலை­வர் ஆணைக்­குழு எங்­கள் மீது குற்­றச்­சாட்­டு­களை முன்­வைக்­க­ வில்லை.

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மீதே குற்­றச்­சாட்­டு­ களை முன்­வைத்­துள்­ளது. அவர்­மீது முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டு­ க­ளின் உண்­மைத்­தன்­மையை அவரே தெளி­வு­ப­டுத்­த­வேண்­டும்.

நாடா­ளு­மன்ற சம்­பி­ர­தா­யங்­களை மீறி, பாட­சா­லை­க­ளுக்­குச் செல்­லும் சிறு­பிள்ளை போன்று சர்­வா­தி­கா­ரத்­து­டன், நாடா­ளு­மன்­றில் இந்த விவ­கா­ரம் குறித்து அவர் உரை­யொன்றை நிகழ்த்­தி­யி­ருந்­தார்.

ஆணைக்­குழு மூலம் ஏதும் பரிந்துரைகள் வழங்­கப்­பட்­டி­ருந்­தால் அதற்கு நான் உரிய பதிலை அளிப்­பேன்.

2008ஆம் ஆண்­டு­மு­தல் மோச­டி­கள் இடம்­பெற்­றுள்­ள­தாக ஆணைக்­குழு தெளி­வா­கக் கூறி­னால் அது தொடர்­பில் விசா­ர­ணை­கள் செய்து உரிய கணக்­காய்­வு­களை மேற்­கொள்­ள­வேண்­டும். கார­ண­மின்றி விசா­ர­ணை­செய்ய முடி­யாது. உயர் நீதி­மன் றில் வழங்­கப்­பட்­டுள்ள தீர்ப்­பில் ரணி­லின் பெயர் சுட்­டிக்­காட்­டப் பட்­டுள்­ளது.

அத­னால் அவர் நாடா­ளு­மன்­றில் தெளி­வு­ப­டுத்­த­ வேண்­டி­ய­வ­ரா­க­வுள்­ளார். நான் அவ்­வாறு உரை­யாற்­ற­வேண்­டிய அவ­சி­ய­மில்லை.

நான் திரு­டன் என்று எங்­கும் கூறப்­ப­ட­ வில்லை. இதே­வேளை, அர­சின் கட்­சி­க­ளும், ரணி­லும் நாடா­ளு­மன்­றில் செயற்­பட்ட விதம் மிக­வும் தவ­றா­ன­தா­கும். எமது உறுப்­பி­னர்­கள் தாக்­கப்­பட்­டுள்­ள­னர்.

அவர்­க­ளுக்கு காயம் ஏற்­பட்­டுள்­ளது. இவை பிழை­யா­ன­வை­ யா­கும். மரிக்­கார் போன்­ற­வர்­கள் வயது கூடிய மூத்த உறுப்­பி­னர் காமினி லொக்­கு­கேயை தாக்­கு­கின்­ற­னர்.

தமது தந்­தைக்கு தாக்­கு­தல் மேற்­கொள்­ளும் வகை­யி­லான செயற்­பாடே அது. இது வெறுக்­கத்­தக்­க­தா­கும். இதற்கு எதி­ராக ஐக்­கிய தேசி­யக் கட்சி நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும். ஆனால், அதனை அவர்­கள் செய்­ய­மாட்­டார்­கள் – – என்­றார்.