நான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில்...!

தான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் தூய்மையான கட்சியை மட்டுமன்றி தூய்மையான அரசாங்கம் ஒன்றையும் தூய்மையான நாட்டையும் கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

அத்துடன் மிஹின் லங்கா மற்றும் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மோசடிகள் சம்பந்தமாக விசாரிப்பதற்கு ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டால் பல்வேறு தகவல்கள் வௌிவரும் என்பதுடன், மேலும் ஊழல் அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்களும் வௌியாகும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த விடயங்கள் அவரது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் குறிப்படப்பட்டுள்ளது.