பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ள செய்தி..!!

பிங்தெனிய பிரதேசத்தில் இன்று காலை பேருந்துடன் மோதுண்டு சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் எதிரப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சிறுமி அவிசாவளை - கண்டி நோக்கி பயணிக்கும் பேருந்துடன் மோதுண்டதாக தெரிவிக்கப்பட்டது.

விபத்தில் உயிரிழந்த சிறுமியின் நண்பி மற்றும் ஓர் சிறுமி காயமடைந்து கேகாலை மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பேருந்தின் சாரதி மற்றும் உதவியாளர் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரு சிறுமிகள் மற்றும் சிறுமியின் நண்பி வீதியில் பயணித்து கொண்டிருந்த போது, இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் குறித்த காணொளி மற்றும் படங்கள் இணைப்பு...