பெண் பொறுப்பதிகாரிக்கு நடந்த கதி; சாரிதியும் நடத்துனரும் கைது

பாணந்துரை காவல் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பெண் பொறுப்பதிகாரியை தாக்கிய சம்பவம் ஒன்று தொடர்பில் பேருந்து சாரிதியும் நடத்துனரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த பெண் அதிகாரி பாணந்துரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பணி நிறைவடைந்து இல்லத்திற்கு திரும்பும் வழியில் நேற்று மாலை குறித்த அதிகாரி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.