வவுனியாவில் முண்டியடிக்கும் மக்கள்

வவுனியாவில் முண்டியடிக்கும் மக்கள்

தமிழர் பெருநாளாகிய தைப்பொங்கல் பண்டிகை நாளை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் வவுனியா மாவட்டத்திலும் இன்று பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது.

தமிழ் மக்களின் திருநாளாகிய தைப்பொங்கள் தினத்தன்று சூரிய பகவானுக்கு நன்றிக் கடன் தெரிவிக்கும் முகமாக பொங்கல் நிகழ்வுகள் நடைபெறும். வீட்டில் கோலமிட்டு, மாவிலை தோரணங்கள் கட்டி பொங்குவார்கள். பொங்கலுக்கு தமிழர் திருநாள் என்பதைப் போல் உழவர் திருநாள் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்பதற்கேற்ப, உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் வவுனியாவில் தைப்பொங்கல் பண்டிகை வியாபாரம் அமோகமாக இடம்பெற்று வருகின்றது.

நகரில் இருந்தும் புற நகர் பகுதியில் இருந்தும் வரும் மக்கள் பொங்கலுக்குத் தேவையான பொருள்களை கொள்வனவு செய்ய முண்டியடிப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.