புலிகளின் பாடல்!! அங்­க­ஜனிற்கு மைத்திரியிடம் இருந்து வந்த தொலை­பே­சி­ அழைப்பு...

தமி­ழீ­ழத்தை மீட்­டெ­டுப்­ப­தற்­காக எழுந்து வா என்று அறை­கூ­வல் விடுக்­கும் தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் பாடலை சுதந்­தி­ரக் கட்­சி­யின் பரப்­பு­ரைக் கூட்­டத்­தில் ஒலி­ப­ரப்­பி­யமை தொடர்­பில், அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தன்­னு­டன் பேசவோ தன்­னைத் திட்­டவோ இல்லை என்று தெரி­வித்­தார் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் அங்­க­ஜன் இரா­ம­நா­தன்.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் வேட்­பா­ளர் அறி­முக நிகழ்வு யாழ். நக­ரில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்­றது.

நிகழ்­வில், தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் எழுச்­சிப் பாடல் ஒலிக்க விடப்­பட்­டி­ருந்­தது. இது தெற்­கில் உட­ன­டி­யா­கவே அதிர்­வ­லையை ஏற்­ப­டுத்­தி­யது.

இந்­தச் சம்­ப­வத்­தின் மூலம் தமி­ழீ­ழத்தை மைத்­திரி ஆத­ரிக்­கி­றாரா என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வின் மூத்த புதல்­வ­ரு­மான நாமல் ராஜ­பக்ச உட­ன­டி­யா­கவே கேள்வி எழுப்­பி­யி­ருந்­தார்.

இதை­ய­டுத்து தமது கட்­சிக் கூட்­டத்­தில் புலி­க­ளின் பாடலை ஒலி­ப­ரப்­பி­ய­மைக்­காக அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் அங்­க­ஜன் இரா­ம­நா­தனை அலை­பே­சி­யில் அழைத்­துத் திட்­டி­னார் என்று நேற்­றுத் தக­வல் வெளி­யா­னது.

கொழும்பு அர­சி­யல் பரப்­பி­லும் இந்த விட­யம் சிலா­கித்­துப் பேசப்­பட்­டது.

‘‘நானும் சமூ­க­வ­லைத் தளத்­தில் இந்­தத் தக­வ­லைப் பார்­தேன். அதில் எந்த உண்­மை­யும் இல்லை. அப்­படி ஒரு சம்­ப­வம் நடக்­க­வே­யில்லை. செய்­தி­யைப் பார்த்­துச் சிரித்­தேன்.

என்­னைப் பொறுத்­த­வரை எமது நிகழ்­வில் நாம் ஒலி­ப­ரப்­பிய பாடல், தமி­ழர் எழுச்­சிக்­கான பாட்டு. இதை எந்­த­வித உள்­நோக்­கத்­து­ட­னும் பார்க்­கத் தேவை­யில்லை.

நாங்­கள், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சிக்கோ, அர­சுக்கோ ஆத­ரவு தரு­வ­தற்­காக தமி­ழர் உணர்­வு­க­ளை­விட்டு, உணர்­சி­களை விட்டு போக வேண்­டும் என்ற தேவை­யில்லை. அதே உணர்வு உணர்ச்சி எப்­போ­துமே இருக்­கும்.

தமிழ்த் தலை­மை­கள் எங்­களை ஏமாற்­றிக் கொண்­டி­ருக்­கும்­போது நாங்­கள் நித்­தி­ரை­யாக இருக்­கக்­கூ­டாது என்­ப­தற்­கான பாட்­டுத்­தான் அது என்­றார்.

நாம­லின் கேள்­விக்­குத் தான் உரிய தரு­ணத்­தில் உரிய பதில் அளிப்­பார் என்­றும் அவர் தெரி­வித்­தார்.