வவுனியாவில் பெரும் சோகத்தினை ஏற்படுத்திய சம்பவம்

வவுனியா - குருமன்காடு பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

தைப் பொங்கள் திருநாளை கொண்டாடுவதற்கு பயணித்து கொண்டிருந்துள்ள போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

அதிவேகம் காரணமாக இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 மற்றும் 21 வயதுடைய இளைஞர்களே இதன்போது உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.