கைது செய்யப்படப்போகும் பிரபல அமைச்சர் யார்?

கடந்த அரசாங்க காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட நில்வளா அபிவிருத்தி திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் தொடர்பாக முன்னாள் நீர்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் அய்வந்த சில்வாவை கைது செய்ய பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நில்வளா திட்டத்தில் 400 கோடி ரூபா அரசாங்க பணம் முறைகேடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நிதி சோசடி விசாரணைப் பிரிவினர் வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தனர்.

அதன்படி குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அய்வந்த சில்வாவை கைது செய்ய கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு விடுத்துள்ளது.

இதேவேளை, குறித்த ஊழல் தொடர்பிலான விசாரணைகள் முடுக்கப்படும்போது அதன் அடுத்தகட்டமாக அரசாங்கத்தின் பிரபல அமைச்சர் ஒருவர் கைது செய்யப்படும் சாத்தியக்கூறு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.