ஐ.நா.-வில் இலங்கையின் தலைமைத்துவம் தொடர்ந்து வருகிறது

ஐ.நா.-வில் இலங்கையின் தலைமைத்துவம் தொடர்ந்து வருகிறது

ஐக்கிய நாடுகள் சபையில் நியாயமான பங்கு வகிப்பதிலிருந்து இலங்கை ஒருபோதும் தவறியதில்லை என ஜெனிவா மனிதஉரிமைகள் பேரவைக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 70ஆவது சுதந்திரத்தினத்தை உலக அறிவுசார் சொத்துரிமை நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஐ.நா மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஐ.நா. சபையின் செயற்பாட்டில் முறையான பங்குவகித்ததன் மூலம் இலங்கை ஒரு நிதானமான, முற்போக்கான பங்காளியாக திகழ்வதற்கு உதவியளித்துள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும், ஆயுத ஒப்படைப்பு, மனித உரிமைகள், சுகாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் சர்வதேச வர்த்தக கொள்கை உள்ளிட்ட பரந்தளவிலான பிரச்சினைகள் தொடர்பாக இலங்கையின் தலைமைத்துவம் தொடர்ந்து வருகிறது என்றும் கூறினார்.

குறித்த நிகழ்வில், உலக வர்த்தக அமைப்பின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி ஆர்.டி.எஸ்.குமாரரத்தன, ஐ.நா.விற்கான பிரதி நிரந்தர பிரதிநிதி சமந்தா ஜயசூரிய மற்றும் சக உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துக் கொண்டிருந்தனர்.