வவுனியாவில் சீருடையுடன் நல்லிணக்க பொங்கல் செய்த இராணுவம்?

இன்று அனுஷ்டிக்கப்படும் இந்துக்களின் விசேட தினமான சிவராத்திரியை முன்னிட்டு வன்னி படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இராணுவத்தினரால் வவுனியா கந்தசாமி ஆலயத்தில் விசேட பொங்கல் இடம்பெற்று பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது வன்னிப் படைத் தலைமையகத்தைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகள், இராணுவத்தினர் எனப் பலரும் ஆலயத்திற்குள் சீருடையுடன் கலந்து கொண்டு நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.