ஜனாதிபதியை சந்தித்துள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நிச்சயமற்ற நிலையை தணிக்கும் வகையில், இலங்கையில் உள்ள உயர்மட்ட இராஜதந்திரிகள் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

குறிப்பாக, இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் அதுல் கேஷாப் மற்றும் இந்திய தூதுவர் தரஞ்சித்சிது ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ள நிலையில், தற்போது நாட்டில் அரசியல் தளம்பல் தோன்றியுள்ளது.

மேலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் என சுதந்திர கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் நேரடியாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.