அமைச்சரும் அவரது மகனும் மருத்துவமனையில் அனுமதி!!

பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும மற்றும் அவரது மகன் ஆகியோர் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஐந்து நாட்களாக புளத்சிங்கள நகரில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இருவரின் உடல்நிலையும் மோசமான நிலையை அடைந்துள்ளதால், மருத்துவரின் ஆலோசனைக்கு அமைய அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வந்த பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த தனது மகனை பார்க்க சென்றிருந்த நிலையில், அவரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தனது ஆதரவாளர் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் சட்டம் அமுல்படுத்தப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.