தென்னிலங்கையின் உயர் காவல்துறை அதிகாரி கைது??

சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பில் மற்றுமொரு உயர் காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் பிரசன்ன நணயக்ககாரவே நேற்றைய தினம் இவ்வாறு குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

லசந்த கொலை தொடர்பான சாட்சியங்களை வேண்டுமென்றே மூடி மறைத்த குற்றச்சாட்டின் பேரிலேயே பிரசன்ன நாணயக்கார கைது செய்யப்பட்டுள்ளார்.

லசந்த கொலையுண்ட போது அவரது வாகனத்தில் காணப்பட்ட குறிப்புப் புத்தகமொன்று காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்த குறிப்புப் புத்தகம் காணாமல் போனமைக்கும் முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் பிரசன்னவிற்கும் தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தாம் படுகொலை செய்யப்படுவதற்கு முன்னதாக லசந்த, தம்மை பின் தொடர்ந்து வந்த மோட்டார் சைக்கிள்கள் பற்றிய விபரங்களை குறிப்பு புத்தகத்தில் குறித்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இந்த மர்மமான முறையில் இந்த குறிப்புப் புத்தகம் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.