மைத்திரியின் இணக்கத்துடன் ரணிலின் அரசாங்கம் உருவாகிறது?

இன்றைய தினம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இன்றைய தினம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் கூட்டு அரசாங்கத்தை நீடிப்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்க உள்ளனர்.

பெரும்பாலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதிய அரசாங்கமொன்று அமைக்கப்படக்கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுகின்றது.

பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் புதிய அரசாங்கமொன்று அமைப்பது குறித்து இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போதைய கூட்டு அரசாங்கத்தின் இறுதி அமைச்சரவைக் கூட்டமாக இன்றைய கூட்டம் பெரும்பாலும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.