இன்று திருமலை பிரபல பாடசாலை ஒன்றில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ள சம்பவம்..

திருகோணமலையின் பிரபல பாடசாலை ஒன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

பாடசாலையின் களஞ்சிய சாலையில் இருந்தே இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை குறித்த களஞ்சிய சாலையை சுத்தம் செய்யும் பணிகள் இடம்பெற்ற போதே, குறித்த வெடிபொருள் கண்டு பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து அங்கு வந்த விசோட அதிரடி படையினர் கைக்குண்டை மீட்டு செயலிழக்கச் செய்துள்ளனர்.