மைத்திரி நாட்டு மக்களுக்கு விஷேட அறிவிப்பு விடுக்கவுள்ளார்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலையடுத்து அரசாங்கம் தற்போது எதிர்கொண்டுள்ள நிலமை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு விஷேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். இந்த தகவலை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னதாக ஜனாதிபதி இவ்வாறு விஷட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் 24 முதல் 48 மணித்தியாலத்திற்குள், ஜனாதிபதி தனது விஷேட உரையை நிகழ்த்துவார் என்று அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கூறியுள்ளார்.