காதலர் தினத்தில் இளைஞனுக்கு நேர்ந்த துயரம்!!

காதலர் தினத்தில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இன்று காலை டிப்பர் வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள் எதிரே வந்த டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளானது.

அதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து திருகோணமலை சீனன்குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிளப்பன் பேக் பகுதியில் நடந்தது.

மூதூர்- 5, பெரியபாலம் பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 22 வயதுடைய இளைஞனே விபத்தில் உயிரிழந்தார்.

சடலம் கிண்ணியா தள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.