தேர்தல் முடிவுகள் அரசியல் அரங்கில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

நாட்­டில் கடந்த 10 ஆம் திகதி நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்­தல், மகிந்­த­வின் மீள் வரு­கையை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது. 2015 ஆம் ஆண்டு ஜன­வரி 8ஆம் திகதி நாட்­டில் நடை­பெற்ற அரச தலை­வர் பத­விக்­கான தேர்­த­லில் மகிந்த ராஜ­பக்ச மூன்­றா­வது தட­வை­யாக போட்­டி­யிட்டு குறித்த தேர்­த­லில் தோல்­வி­ய­டைந்­தார்.

சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யின் செய­லா­ள­ராக இருந்த இன்­றைய அரச தலை­வ­ரான மைத்­திரி பால சிறி­சேன, ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்சி உட்­பட பல எதி­ர­ணிக்­கட்­சி­கள், அமைப்­புக்­கள் ஒன்று சேர்ந்த கூட்­டணி சார்­பில் போட்­டி­யிட்டு தமிழ்­பே­சும் மக்­க­ளின் அமோ­க­மான ஆத­ர­வு­டன் அர­ச த­லை­வ­ராக தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்­தார்.

2015ஆம் ஆண்­டின் ஜன­வரி மாதத்­தில் இடம்­பெற்ற அரச தலை­வர் தேர்­தல் மூலம் அரச தலை­வர் பத­வி­யி­லி­ருந்து வௌியேற்­றப்­பட்ட மகிந்த ராஜ­பக்ச, அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடை­பெற்ற பொதுத்­தேர்­த­லில் அரச த­லை­வ­ரான மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி சார்­பில் நாடா­ளு­மன்­றத் தேர்­தல் வேட்­பா­ள­ராக குரு­நா­கல் மாவட்­டத்­தில் போட்­டி­யி­டு­வ­தற்கு அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­தார்.

தமிழர்கள் தமக்கு எதி­ராகத் தேர்­த­லில் வாக்­க­ளித்­ததால்

மகிந்த அதி­ருப்தி

தனது அரச தலை­வர் தேர்­தல் தோல்­வியை நாடா­ளு­மன்­றத் தேர்­தல் மூல­மாக துடைத்­தெ­றிய வேண்­டும் என்ற இறு­மாப்­புடன் களமிறங்கிய மகிந்த ராஜபக்ச, கடந்த அரச தலை­வர் தேர்­த­லில் சிறு­பான் மைச்­ச­மூ­கத்­தின் வாக்­குப்­ப­லம் மூலம் தோற்­க­டிக்­கப்­பட்­ட­த­னால் நாடா­ளுமன்­றத்­தேர்­த­லில் பெரும்­பான்­மைச் ச­மூ­கத்­தில் வாக்­கு­க­ளைக் குறி வைத்­துக் தேர்­த­லில் கள­மி­றங்­கி­யி­ருந்தார்.

நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் மகிந்த பிர­தா­ன­மா­கப் போட்­டி­யிட்­ட­மைக்­கான கார­ணம், அரச தலை­வ­ரான மைத்­திரி பால சிறி­சேன உட்­பட ஆட்­சி­ய­மைத்த ஐக்­கிய தேசிய கட்­சி­யி­ன­ரின் அர­சி­யல் பழி­வாங்­கல்­க­ளுக்­குப் பதி­லடி கொடுப்­ப­தற்­கா­கவே என தென்­னி­லங்கை அர­சி­ய­லில் பேசப்­பட்­டி­ருந்­தது. நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி சார்­பில் போட்­டி­யிட்ட மகிந்­த­ரா­ஜ­பக்ச பெரும்­பான்மை வாக்­கு­க­ளால் குரு­நா­கல் மாவட்­டத்­தில் வெற்றி பெற்­றி­ருந்­தார். நாடா­ளு­மன்­றத்­தேர்­த­லில் மகிந்த அணி சார்­பில் போட்­டி­யிட்ட 40க்கு மேற்­பட்ட வேட்­பா­ளர்­கள் வெற்றி பெற்று மகிந்­த­வின் பலத்தை அதி­க­ரித்து இருந்­த­னர்.

மகிந்த ராஜ­பக்­ச­வின் மீள்­வ­ருகை தொடர்­பில் நாட்­டி­லுள்ள ஏனைய சிறு­பான்­மைக்­கட்­சி­கள் கடும் விமர்­ச­னங்­க­ளை­யும், கருத்­துக்­க­ளை­யும் முன்­வைத்­தி­ ருந்­தன. மகிந்த ராஜ­பக்ச மீண்­டும் அதி­கா­ரத்­தைக் கைப்­பற்ற நினைப்­ப­தா­வது அவர் அதி­கா­ரத்­தின் மீது கொண்ட வெறி­யும், தாம் செய்த ஊழல்­களை மறைப்­ப­தற்­காக தாம் தலைமை அமைச்­சர் பத­வியை ஈட்­டிக்­கொண்­டால் முழு­மை­யாக நிவர்த்தி செய்­து­வி­ட­லாம் என எண்­ணித்­தான் மகிந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் போட்­டி­யிட்­டி­ருந்­தா­லும் அவ­ரது தலைமை அமைச்­ச­ராக வேண்­டும் என்ற கனவு அடி­யு­டன் நிரா­சை­யா­கி­ விட்­டது.

தென்­னி­லங்­கை­யில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யின் பலம் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் ஓங்­கி­யி­ருந்­தது. இருப்­பி­னும் சிங்­கள மக்­க­ளில் பெரும்­பான்­மை­யா­னோர் தன்­னையே ஆத­ரித்­த­தா­கக் கூறியே அர­சுத்­த­லை­வர் தேர்­த­லில் தனக்­கேற்­பட்ட தோல்­வியை மகிந்த அன்றே நிரா­க­ ரித்­தி­ருந்­தார்.

சுதந்­தி­ரக் கட்சி பிள­வு­ப­டக் கூடாது என்­ப­தற்­கா­கவே மகிந்­த­வுக்கு வேட்பாளர் நியமனம் வழங்கப்பட்டது. சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி பிள­வு­ப­டக்­கூ­டா­தென்­ப­தற்­கா­கவே ராஜ­பக்­ச­வுக்கு நாடா­ளு­மன்ற வேட்­பா­ளர் நிய­ம­னத்தை மைத்­தி­ரி­பால சிறி­சேன வழங்­கி­யி­ருந்­தார். மகிந்­தவை மீண்­டும் அர­சி­ய­லுக்கு கொண்டு வரு­வ­தற்­காக மகிந்­த­வின் முக்­கிய விசு­வா­சி­ க­ளும், ஆத­ர­வா­ளர்­க­ளும் தீவிர முயற்­சி­களை முன்­னெ­டுத்து வந்­த­னர்.

மகிந்த தரப்­பி­லுள்ள நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் ஒன்று சேர்ந்து மைத்­திரி– ரணில் கூட்டு ஆட்­சிக்கு சிக்­கல்­களை ஏற்­ப­டுத்­தும் விதத்­தில் குழப்­பங்­க­ளை­யும் நெருக்­க­டி­க­ளை­யும் தொடர்ந்து ஏற்­ப­டுத்­திக்­கொண்­டி­ருந்­த­னர். போர் அறிவிப்புப் போல் 2017 ஆம் ஆண்டு மைத்­திரி தலை­மை­யி­லான ஆட்­சியை வீழ்த்­து­வதே எனது முதல் வேலை என மகிந்த திடங்­கற்­கற்­பம் பூண்டு அதற்­கான பரப்புரைகளை தென்­னி­லங்­கை­யில் முன்­னெ­டுத்து இருந்­தார்.

மைத்­திரி தரப்பினரது நெருக்­க­டி­கள் மகிந்த குடும்­பத்­தின் மீது பாய்ந்­தா­லும் மகிந்த குடும்­பத்­தி­னரை தலைமை அமைச்­ச­ரான ரணிலே மறை­மு­க­மாகக் காப்­பாற்றி வரு­கின்­றார் என்ற குற்­றச் சாட்­டுக்­க­ளும் எழுந்­தி­ருந்­தன.மகிந்த தனது புதல்­வர்­கள், மனைவி மீதான குற்­றச் சாட்­டுக்­கள், மகிந்­த­வின் சகோ­த­ரர்­கள் மீதான விசா­ர­ணை­கள், 2016, 2017 ஆம் ஆண்­டு­க­ளில் இடம்­பெற்று இருந்­தன. வருட ஆரம்­பத்­தி­லும் அரச தலை­வ­ரும் தலைமை அமைச்­ச­ரும் மகிந்த குடும்­பத்­தின் மீதான ஊழல்­கள், நிதி மோச­டி­கள் மீதான குற்­றச்­சாட்­டுக்­கள் மீதான விசா­ர­ணை­கள் முடிந்­த­தும் வழக்­குத்­தாக்­கல் செய்­யப்­ப­டும் என ஆவே­ச­மாக அறி­வித்­தி­ருந்தனர்.

2016 இல் மகிந்த குடும்­பத்­தின் மீதான குற்­றச்­சாட்­டுக்­க­ளில் £££இருந்து மீள முடி­யாத நெருக்­கடி ஏற்­பட்டு வந்­த­த­னால், மகிந்த புதிய கட்­சியை ஆரம்­பிப்­பதை தவிர்த்து வந்­தார். பின்­னர் 2016 ஆம் ஆண்டு யூலை மாதம் அள­வில் ‘‘ஜப்­பான் ரைம்ஸ்’’ நாளி­த­ழுக்கு அளித்­தி­ருந்த செவ்வியில் மகிந்த தாம் ஒரு­போ­தும் அர­சி­ய­லில் இருந்து ஓய்வு பெறப்­போ­வ­தில்லை என்று கூறி­யி­ருந்­தார். அவ­ரது அந்­தக்­க­ருத்து உயி­ரு­டன் இருக்­கும் வரை­யில் அர­சி­யல் செய்­வேன் என்­ப­தைத்­தான் வௌிப்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

தாம் அர­சி­ய­லில் இந்த வேளை ஒதுங்­கிக் கொண்­டால் தம­தும் குடும்­பத்­த­வ­ர­தும் அர­சி­யல் வாழ்வு பாதிக்­கப்­ப­டு­மென மகிந்த நம்­பி­னார்

இன்­னும் ஒன்­றை­யும் அவர் தௌிவாக உணர்ந்து கொண்­டார். தான் அர­சி­ய­லில் இருந்து ஒதுங்­கிக்­கொண்­டால், அது தனது குடும்ப அர­சி­யல்­வா­ரி­சு­களை நடுத்­தெ­ரு­வுக்கு கொண்டு வந்­து­வி­டும் என்­பதை மகிந்த தெளி­வாக உணர்ந்து இருந்­தார். ஆட்­சியை இழந்த பின்­னர் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யினூடாக மீண்­டும் அதி­கா­ரத்­திற்கு வர முடி­யுமா? என்ற வலு­வான சந்­தே­க­மும் மகிந்த­வின் மன­தில் நில­வி­யது. தனிக்­கட்சி தொடங்கி அதி­கா­ரத்தை கைப்­பற்ற முடி­யுமா? என்ற சந்­தே­க­மும் அவ­ரி­டம் நிலவி வந்­தது.

சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியை விட்டு போக மாட்­டேன் என்று அந்­தக்­கட்­சி­யில் விசு­வா­சத்­து­டன் இருப்­பது போன்று காட்­டிக்­கொண்­டா­லும் சிறி­லங்­கா­சு­தந்­தி­ ரக்­கட்­சிக்கு எதி­ரான அர­சி­ய­லைத்­தான் மகிந்த இன்று வரை­யில் முன்­னெ­டுத்து வந்­துள்­ளார்.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சிக்­கும், ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்­கும் போட்­டி­யாக தனிக்­கட்சி ஒன்றை அமைத்து போட்­டி­யி­டு­வ­தற்கு தயார் படுத்­தல்­க­ளில் கூட்டு எதி­ரணி 2016 ஆம் ஆண்டு ஒக்­ரோ­பர், செப்­டம்­பர் மாதங்­க­ளில் இறங்­கி­யி­ருந்­தது. தளர்ந்து போயி­ருந்த மகிந்­த­வின் ஆளு­மை­யா­னது 2017 ஆம் ஆண்டு உயிர்ப்­புப் பெற்­றது.

உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்­தல் நடை­பெ­று­வது குறித்து மகிந்­தவை தலை­மை­யா­கக் கொண்டு புதிய கட்­சியை உரு­வாக்கி இரண்டு பெரிய தேசி­யக்­கட்­சி­க­ளு­டன் எதிர்த்­துப் போட்­டி­யிட்டு வெற்றி பெற வேண்­டும் என்ற கருத்­தா­னது, எதிர்க்­கட்­சி­கள் தரப்­பில் உறு­தி­யா­யி­ருந்த நிலை­யில், கடந்த வரு­டம் மகிந்­த­வின் சகோ­த­ர­ரான பசில்­ரா­ஜ­பக்ச, முன்­ன­னாள் அமைச்­ச­ரான ஜீ. எல். பீரிஸ் தலை­மை­யில் சிறி­லங்கா பொது­ஜன பெர­முன என்ற புதிய தொரு கட்சி உரு­வாக்­கப்­பட்டு அதற்­கென தாமரை மொட்டு சின்­னம் உரு­வாக்­கப்­பட்டு இலங்கை அர­சி­ய­லில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

மைத்­திரி தலை­மை­யி­லான சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் உடைவு தவிர்க்க முடி­யா­த­தா­கி­விட்­டது. மகிந்­த­வின் உறு­தி­யான மீள் பிர­வே­ச­மும், அர­சி­யல் மாற்­றங்­க­ளும் உள்­ளூ­ராட்சி சபைக்­கான தேர்­தல் மூலம் இலங்கை அர­சி­ய­லில் இவ்­வ­ரு­டம் பெரும் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தும். மகிந்த மீதான அச்­சம், கூட்டு ஆட்­சித் தரப்­பி­ன­ருக்கு ஏற்­க­னவே பெரும் தாக்­கத்தை கொடுத்­தி­ருந்­தன.

கடும் அழுத்­தங்­கள் கார­ண­மா­கவே மைத்­தி­ரி­பால உள்­ளூ­ராட்­சித்

தேர்­தலை நடத்த முன்­வந்­தார்

உள்­ளூ­ராட்­சிச் சபைத் தேர்­தல் முறை­யில் மாற்­றம் கொண்டு வரு­வ­தற்­கான திருத்­தச் சட்­டம், வட்­டார எல்­லை­களை மாற்றி அமைத்­தல் போன்ற பணி­கள் பூர்த்தி செய்­யப்­பட வேண்டி இருந்­த­தால், அரசு, காலத்­தைக் கடத்தி உரிய காலத்­தில் தேர்­தலை நடத்­தாது தள்­ளிப் போட்டு வந்­தது. எதிர்க்­கட்­சி­க­ளின் கண்­ட­னங்­க­ளுக்­கும், பல நெருக்­க­டி­க­ளுக்­கும் உள்­ளான நிலை­யில் 2018 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் தேர்­தலை நடத்தி முடிக்க வேண்­டிய கட்­டா­யம் ஏற்­பட்­டி­ருந்த நிலை­யில் கூட்டு ஆட்சி அர­சின் மீதான குற்­றச்­சாட்­டு­க­ளும், நெருக்­க­டி­க­ளும் நாளுக்கு நாள் அதி­க­ரித்து வந்­தன.

மைத்­திரி– ரணில் கூட்டு அர­சாங்­கம் ஆட்­சிக்கு வந்த பின்­னர் நடை­பெற்­றுள்ள உள்­ளூ­ராட்­சிச் சபைத் தேர்­த­லில் இரு பெரும் கட்­சி­க­ளு­டன் மகிந்த அணி சார்­பி­லான சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­ன­வும் நாடு முழு­வ­தும் போட்­டி­யிட்­டன. முன்­னைய அரசு தலை­வ­ரான மகிந்த தனது இழந்த செல்­வாக்கை நடை­பெற்ற உள்­ளூ­ராட்­சிச் சபைத் தேர்­தல் மூலம் முழு­மை­யா­கப் பெற்று விட வேண்­டு­மென்­ப­தில் உறு­தி­யாக இருந்­தார். மகிந்த சார்­பி­லான சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­ன­வின் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சியை இரண்­டு­பட வைத்த நிலை­யில் உள்­ளூ­ராட்­சி­ச­பைத் தேர்­தலை சந்­தித்­தி­ருந்­தது.

தேசிய அர­சாங்­கத்­துக்கு உள்­ளூ­ராட்சி சபைத்­தேர்­தல் ஒரு சோத­னைக்­க­ள­மாக அமை­யும் என்­பதை நாட்டு மக்­கள் உணர்ந்­தி­ருந்­த­னர். இரு பெரும் கட்­சி­க­ளான ஐக்­கிய தேசி­யக் கட்சி, சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி வரி­சை­யில் மூன்­றா­வது கட்­சி­யாக சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­ன­வும் இணைந்து கொண்­டது. கூட்டு அர­சுக்கு எதி­ரான சகல அர­சி­யல் செயற்­பா­டு­க­ளை­யும் மகிந்த தரப்­பி­னர் திட்­ட­மிட்டு முன்­னெ­டுத்­த­னர்.

தமி­ழ­ருக்கு தமி­ழீ­ழம் வழங்­கு­வ­தற்­கா­னதே புதிய அர­ச­மைப்பு யோசனை என்ற மகிந்­த­வின் கடும்­போக்­குச் சிந்­தனை, இன­வா­தச் சிந்­தனை, போரில் வெற்றி கண்ட படை­யினை நல்­லாட்சி அரசு மதிக்­கா­தமை, போர் வெற்­றியை கூட்டு அரசு கொண்­டா­டு­வ­தைத் தவிர்த்து அதனை உதா­சீ­னம் செய்­தமை, நாட்டை வௌிநா­டு­க­ளி­டம் விற்று விட்­ட­தென்ற குற்­றச்­சாட்டு, ஊழல் மோசடி நல்­லாட்சி அர­சில் மிக மோச­மாகி விட்­டது; மக்­க­ளின் பொரு­ளா­தார சுமை மலை போல் ஏறி­விட்­டது.விலை­வாசி உயர்­வு­களை அர­சி­னால் தடுக்க முடி­யாத நிலை, அரிசி, தேங்­காய் விலை­யு­யர்வு போன்­றவை மகிந்த தரப்­பின் பரப்­பு­ரைக்­கான கருப் பொருள்­க­ளாக அமைந்­தி­ருந்­தன.

எப்­ப­டி­யா­வது உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் தமது பலத்தை நிரூ­பிக்க வேண்­டு­மென்­ப­தில் தீவி­ரம் காட்­டினார் மகிந்த

மகிந்த ராஜ­பக்ச உள்­ளூ­ராட்­சிச் சபைத் தேர்­த­லில் கூட்டு அர­சுக்­குப் பின்­ன­டைவை ஏற­ப­டுத்தி கூட்டு ஆட்சி அர­சைக் கவிழ்க்க வேண்­டும். சுதந்­தி­ரக் கட்சி தலை­மை­யைக் கைப்­பற்ற வேண்­டும்; தா ன் தலைமை அமைச்­ச­ராக வேண்­டும்; ஆகிய கொள்­கைத் திட்­டங்­க­ளோடு போட்­டி­யிட்ட சிறி­லங்கா பொது­ஜன பெர­முன 39 இலட்­சத்­துக்கு மேற்­பட்ட வாக்­கு­க­ளைப் பெற்று 222 சபை­க­ளில் பெரும்­பான்­மை­யைக் கைப்­பற்றி, தனது சோர்­வ­டைந்­து­போ­யி­ருந்த ஆளு­மைக்­கும் எதிர்­கால அர­சி­ய­லுக்­கும் பல­மா­ன­தொரு வலு­வைச் சேர்த்­தி­ருக்­கின்­றார்.

நாட்­டில் சிங்­கள இனத்­திற்­கான முடி சூடா மன்­னன், மகிந்த ராஜ­பக்­சவே என்­பதை உள்­ளூ­ராட்­சிச் சபைத் தேர்­தல் முடி­வு­கள் தௌ்ளத் தௌிவாக எடுத்­தி­யம்­பி­யுள்­ளன.

இதுவே யதார்த்­தம். மகிந்­த­த­ரப்பு வெற்­றி­யால் அர­சுத்­த­லை­வ­ருக்­கான பத­விக்­கா­லம் முடி­யும் வரை­யும் கூட்டு ஆட்சி அர­சா­னது பல சோத­னை­க­ளுக்கு முகம் கொடுப்­ப­து­டன் பெரு­மாற்­றங்­க­ளை­யும் ஏற்­ப­டுத்­தக் கூடிய சந்­தர்ப்­பத்­தை­யும் சந்­திக்க நேரி­டக் கூடும். ஆனால் தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை­யில் எந்த வித­மான முன்­னேற்­றமோ நிம்­ம­தி­ யான வாழ்வோ ஏற்­ப­டப் போவ­தில்லை. புதிய அர­ச­மைப்பு சீர்­தி­ருத்­த­மும் உரு­வா­கப் போவ­து­மில்லை. மகிந்­த­வின் அர­சி­யல் அறு­வ­டை­யும் எழுச்­சி­யும் தமி­ழி­ன­ளத்­திற்­குப் பாத­க­மா­ன­தா­கவே அமை­யப்­போ­கின்­றது.