சுதந்­தி­ரக் கட்­சித் தலை­வர் பத­வியை ஏற்­கத் தயார்

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் தலை­மைப் பத­வியை ஏற்­றுக் கொள்­ளத் தயா­ரா­கவே இருப்­ப­தாக முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­தார்.

கொழும்­பில் நேற்­று­முன்­தி­னம் நடத்­திய செய்­தி­யா­ளர் சந்­திப்­பில், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் தலை­வர் பதவி வழங்­கப்­பட்­டால் ஏற்­றுக் கொள்­வீர்­களா என்று கேள்வி எழுப்­பப்­பட்­டது.

அதற்கு மகிந்த ராஜ­பக்ச, நிச்­ச­ய­மாக அதனை நான் ஏற்­றுக் கொள்­வேன். ஆனால், மைத்­தி­ரி­பால சிறி­சேன நிச்­ச­ய­மாக அதனை வழங்­க­மாட்­டார். அது எனக்­குத் தெரி­யும், என்று மகிந்த பதி­ல­ளித்­துள்­ளார்.