தமிழ் மன்னன் சங்கிலியனது வாரிசு இப்போதும் உயிருடன்

இதை யாரும் நம்பவில்லைத்தான்...!

இது அனைவரிற்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது,

ஆனாலும் இது உண்மையிலும் உண்மையான செய்திதான் என்று கூறுகிறார்கள்.

இலங்கையின் யாழ்ப்பாண ராச்சியத்தை ஆண்ட சங்கிலி மன்னனின் வாரிசு,

இப்போது ஐரோப்பிய நாட்டில் வெள்ளையர்களால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் கசிந்து வருகிறது.

சங்கிலி மன்னனின் பரம்பரையில் வந்த 28 ஆவது வாரிசு இப்போது ஐரோப்பிய தேசத்தில் உயிருடன் வாழ்ந்து வருவதாக அறிகிறோம்.

இவர் தொடர்பான உண்மைத் தகவல்களை அறிவதற்கு முயற்சிள் மேற்கொள்ளப்படுகிறது.

முன்னொருகாலத்தில் யாழ்ப்பாணம் நல்லூர் நகரை தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்து வந்த சங்கிலிய மன்னன்,

தனது தேசத்தையும் மக்களையும் பாதுகாப்பதற்காக வெள்ளையர்களுடன் போரிட்டு வீரமரணம் அடைந்தார்.

அவரது வீழ்ச்சிக்குப் பின்னர் யாழ்ப்பாணம் வெள்ளையர்களின் வசமானது.

சங்கிலி மன்னனது வாரிசை, அக்காலத்து அரச குடும்ப பற்றாளர்கள் இன்றுவரை பாதுகாத்து வருவதாக அறியமுடிகிறது.

கண்காணாத தேசத்தில் அநாதையாக இருக்கும் நமது சங்கிலி மன்னரது வாரிசைப்பற்றிய தகவல் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால்

அவர்பற்றிய தகவல்களை தருமாறு வரலாற்று ஆய்வாளர்கள் வேண்டுகோள் விடுக்குறார்கள்.

சங்கிலி மன்னன் யாழ்ப்பாண தமிழ் மக்களின் வரலாற்றுப் பொக்கிஷம் என்பதை உலகமே அறியும்.

இங்கிலாந்து அரசபரம்பரையான எலிசபத் மகாராணியின் பரம்பரைக்குப் பின்னர், அறியப்பட்ட அடுத்த இராச பரம்பரையாக நமது தமிழனின் அரச பரம்பரையே என்று கூறவேண்டும்.

தமிழன் இனி தலைநிமிர்ந்து வாழும் காலம் வெகுவிரைவில் மலரப்போகிறது என்பதற்கு, இச்செயதி அடித்தளமிட்டு உற்சாகமூட்டுவதாக அமைகிறது எனலாம்.

எமது வரலாற்றை பேணிப்பாதுகாப்பது எம் எல்லோரதும் தலையாய கடமையல்லவா.

இந்த நல்ல செய்தியை எல்லா நண்பர்களுக்கும் தெரியப்படுத்தி, வரலாற்று உண்மைய அறிய உதவுமாறு மிகவும் பணிவுடன் கோரப்படுகிறது

தகவல்

ஜெகதல பிரதாபன்