கண்­டிக் கல­வ­ரத்­தில் தாக்குதல் நடத்தும் பெண்­க­ள் பற்றிய பகீர் காணொலி

கண்­டி­யில் கடந்­த­வா­ரம் இடம்­பெற்ற கல­வ­ரத்­தின் போது முஸ்­லிம் பள்­ளி­வா­சல்­கள் மீது பெண்­க­ளும் தாக்­கு­தல் நடத்­தும் காணொ­லி­கள் வெளி­யா­கி­யுள்­ளன.

கண்­டிக் கல­வ­ரம் கட்­டுக்­குள் வந்து, இயல்­பு­நிலை திரும்­பிக் கொண்­டி­ருக்­கின்­றது. கல­வ­ரம் நடந்த இடங்­க­ளி­லுள்ள மறை­காணி (சிசி­ரிவி) காணொ­லிக் காட்­சி­கள் தற்­போது வெளி­யாகி வரு­கின்­றன.

கண்­டி­யி­லுள்ள பள்­ளி­வா­சல் மீது மூர்க்­க­த­ன­மாக பெண் ஒரு­வர் தாக்­கும் காணொலி வெளி­யா­கி­யுள்­ளது. இதே­போன்று வேறு சில இடங்­க­ளி­லும், பெண்­கள் முஸ்­லிம் வர்த்­தக நிலை­யங்­கள் மீது தாக்­கு­தல் நடத்­தும் காணொ­லி­யும் வெளி­யா­கி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.