கொழும்பில் தொடரும் பாரிய பிரச்சனை!! அவதியில் மக்கள்

கொழும்பு நகரில் மாளிகாகந்தை, மருதானை, தெமட்டகொடை உள்ளிட்ட பல பிரதேசங்களில் ஒருவார காலமாக குப்பைகள் நிறைந்துள்ளதாக பிரதேசவாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கொழும்பு மாநாகர சபையின் கழிவுகள் அகற்றும் பிரிவு குப்பைகளை சேகரிப்பதற்றாக வராமை காரணமாக தாம் இந்த அசௌகரியத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் எமது செய்தி பிரிவு கொழும்பு மாநாகர சபையின் பதில் மாநகர ஆணையாளர் லலித் விக்ரமரத்னவிடம் வினவிய போது, குப்பைகளை வகைப்படுத்தாமையால் இந்த பிரச்சினை எழுந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

எனினும் குப்பைகள் வகைப்படுத்தப்பட்டிருந்தும், மாநகர சபையின் பணியாளர்கள் அவற்றை கொண்டு செல்ல வருவதில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.