இலங்கையர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..நழுவவிடாதீர்கள்..

2018 ஆம் ஆண்டின் அரசு புகைப்பட விழாவுக்கு தற்பொழுதிலிருந்து படைப்புகள் ஏற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயத்தினை உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி கலாச அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து மேற்படி திணைக்களம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஐந்து பிரிவுகளின் கீழ் நடைபெறும் இந்த விழாவுக்கு இலங்கையர் அனைவரும் தமது படைப்புக்களை அனுப்பி வைக்க முடியும். விண்ணப்பம் உள்ளிட்ட விபரங்களை பிரதேச செயலகத்திலும், மாவட்ட செயலகத்திலும் பெற்றுக் கொள்ள முடியும். கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் தலைமையகத்திலும் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

விண்ணப்பங்களை நாட்டில் உள்ள எந்தவொரு பிரதேச செயலகத்திலோ அல்லது மாவட்ட செயலகத்திலோ கையளிக்க முடியும். கலாசார திணைகத்தின் தலைமையகத்திற்கு நேரடியாகவோ, பதிவுத்தால் மூலமாகவோ அனுப்பி வைக்க முடியும். மேமாதம் 15 ஆம் திகதி வரை இதற்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.