முல்லைத்தீவு செம்மலையில் அம்புலன்ஸ் மோதி குடும்பஸ்தர் பலி…

முல்லைத்தீவு செம்மலைப்பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அம்புலன்ஸ் வண்டியுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளார். விபத்தினை தொடர்ந்து அம்புலன்ஸ் வண்டி மீது மக்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை ஏற்பட்ட இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 53 வயதுடைய கந்தையா புவனேந்திரன் என்னும் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

இதனை அடுத்து தப்பியோடிய அம்புலன்ஸ் வண்டியின் சாரதி பின்னர் முலை;லைத்தீவு காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது சடலம் மாவட்ட மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் குறித்து முல்லைத்தீவு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.