ஹரீசைக் கட்சியில் இருந்து துாக்கும் ஹக்கீம்

முஸ்லிம் சமூகத்திற்காக ஒலிக்கின்ற குரல்களை நசுக்கும் செயற்பாடே பிரதி அமைச்சர் ஹரீஸூக்கான ஒழுக்காற்று நடவடிக்கை!

கண்டி இன வன்முறையால் பாதிக்கப்பட்டமுஸ்லிம்களுக்காக பாராளுமன்றத்தில் குரலெழுப்பியபிரதி அமைச்சர் ஹரீஸூக்கு எதிராக ஒழுக்காற்றுநடவடிக்கை எடுக்க மு.காவின் ஒரு தரப்பு முனைந்ததைகண்டிப்பதாக சமாதானம்,கல்வி மற்றும்கலாச்சாரத்திற்கான அமையம் (ஒபேக்) வெளியிட்டுள்ளகண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,

பிரதி அமைச்சர் ஹரீஸ் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரானநடவடிக்கைகளின் போது தன்னை முழுமையாகஅர்ப்பணித்து செயற்படுகின்ற ஒரு அரசியல் தலைமைஎன்பதை இன்று நாடறியும். இருந்த போதும் சிலரின்காழ்ப்புணர்ச்சியின் செயற்பாட்டினால் அவருக்கெதிராகமுஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் ஒழுக்காற்றுநடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சியின்செயலாளர் நிசாம் காரியப்பர் தலைமையிலான ஒருசிலஉயர்பீட உறுப்பினர்கள் செயற்பட்டமை முழு முஸ்லிம்மக்களின் மனங்களை புண்படுத்தியுள்ளதுடன் இன்றுஇவர்கள் ஒட்டு மொத்த முஸ்லிம் மக்களின்கோபத்துக்கும் ஆளாகியுள்ளனர்.

மாமனிதர் எம்.எச்.எம்.அஷ்ரஃப் முஸ்லிம்களின்உரிமைக்காகவும் விடிவிக்காகவும் உருவாக்கிய கட்சிஇன்று முஸ்லிம்களின் உரிமைக்காகவும்விடிவிக்காகவும் பாராளுமன்றில் பேசியதற்காகபாராளுமன்ற உறுப்பினருக்கே ஒழுக்காற்றுநடவடிக்கை என்றால், முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எங்குநோக்கி பயணிக்கிறது என்ற கேள்வி எழுவதுடன்இக்கட்சி சுயநலவாதிகளின் கூடாரமாகமாறிவருகின்றதா என சந்தேகிக்கத் தோன்றுகின்றது.

பிரதி அமைச்சர் ஹரீஸ் தனது பாராளுமன்ற உரையில்முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையினை நல்லாட்சிஅரசு தடுக்க தவறியுள்ளது.

பாராளுமன்றில் பிரதமருக்குஎதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேணையின் போது முஸ்லிம் பாராளுமன்றஉறுப்பினர் பிரதமருக்கு எதிராக வாக்களிக்கநேரிடலாம் என மிகக் காட்டமாக கூறியிருந்தார்.

பிரதிஅமைச்சரின் இந்த உரைக்கு எதிராக கட்சியினால்ஒழுக்காற்று நடவடிக்கை என்ற நகர்வு பிரதமருக்கு கட்சியிலுள்ளவர்கள் சிலர் தங்களது விசுவாசத்தைகாட்ட முற்பட்டுள்ளனரா என்ற பலத்த சந்தேகம் எழாமலில்லை.

முஸ்லிம் சமூகத்திற்காக ஒலிக்கின்ற குரல்களைதிறைமறைவில் இருந்து நம்மவர்களைக் கொண்டுநசுக்கின்ற வழிவகைகளை இன்று டயஸ்போரா போன்றஇயக்கங்கள் மேற்கொண்டு வருகின்றது. இந்தவலையில் கட்சியின் செயலாளர் சிக்குண்டுள்ளாராஎன்ற கேள்வியும் எழுகின்றது.

எனவே சமூகத்தின் நலனுக்காக கட்சியினைமுன்னெடுத்துச் செல்ல சகலரும் ஒன்றிணைய வேண்டும்எனவும் அவ்வறிக்கையில் மேலும்தெரிவிக்கப்பட்டுள்ளது.