பேஸ்புக் தடையும் நீங்குகின்றது !!

பேஸ்புக் நிறுவன உறுப்பினர்கள் மற்றும் ஜனாபதியின் செயலாளருக்கு இடையில் நாளைய தினம் இடம்பறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் பேஸ்புக்கிற்கான தடையை தீக்கப்படவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது பேஸ்புக் சமூக வலைத்தளம் ஊடாக இனவாத கருத்துக்கள் பரவுவதை தடுப்பதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

இதேவேளை, பொதுமக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை கருத்திற் கொண்டு வைபர் மற்றும் வட்ஸப் சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கிக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.