பிரபாகரனின் கண்காணிப்பில் இருந்த விடுதலை புலிகள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

பிரபாகரனின் நேரடி கண்காணிப்பில் இருந்த 22 ஆயிரத்து 249 விடுதலை புலிகள் குறித்த தகவல் தொடர்பான கண்டுபிடிப்பு ஒனறு நடைபெற்றுள்ளது.

விடுதலை புலிகள் இயக்கமானது தலைவர் பிரபாகரனின் கீழ் பெரும் படைப்பிரிவுகளை கொண்டாக அமைப்பாக உருவாக்கப்பட்டு சிறந்த கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வந்துள்ளது. இந்த படையணிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தமிழ் எழுத்துக்களை கொண்டு பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஜ என்னும் எழுத்து புலனாய்வு பிரிவை குறிப்பதாகும்.

இதனடிப்படையில் தலைவர் பிரபாகரனின் நேரடி கண்காணிப்பில் சைவர் (0)படையணி காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் 0;01என்னும் இலக்கம் தலைவர் பிரபாகரனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தாலும் ஒவ்வொரு படையணியிலும் எத்தனை விடுதலை புலிகள் காணப்பட்டார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை.

ஆனால் சமீபத்தில் நந்திக்கடல் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட தகடு ஒன்றில் 0;22249 என்ற இலக்கம் காணப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை தலைவர் பிரபாகரனின் நேரடி கண்காணிப்பில் 22 ஆயிரத்து 249 விடுதலை புலிகள் காணப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.