இலங்கை மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!!

பயணிகளின் நலன் கருதி பண்டிகைக் காலத்தில் இலங்கை ரயில்வே திணைக்களம் ஒழுங்கு செய்துள்ள பிரத்தியேக தொடருந்துச் சேவைகள் இன்றும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் 9.20 இற்கும் 11.50 இற்கும் மருதானையில் இருந்து காலி நோக்கி இரண்டு தொடருந்து வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படும்.

அதேபோல் காலை 7.05 இற்கும் நண்பகல் 1.05 இற்கும், மாலை 5.55 இற்கும் காலியில் இருந்து மருதானை நோக்கி தொடருந்துச் சேவைகள் இடம்பெறும் என்று ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.