கூட்­ட­மைப்பை பழிக்­குப் பழி தீர்த்த ஈ.பி.டி.பி

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை மற்­றும் நெடுந்­தீவு பிர­தேச சபை­யில் எமது கட்­சிக்கு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு செய்த அநீ­திக்­குப் பழிக்கு பழி வாங்­கும் செயற்­பா­டா­கவே வவு­னியா நகர சபை­யில் நடந்­த­தைப் பார்க்­கின்­றோம் என்று ஈ.பி.டி.பியின் அமைப்­பா­ளர் திலீ­பன் தெரி­வித்­தார்.

வவு­னியா நகர சபையை, கூட்­ட­மைப்பை எதிர்த்­துப் போட்­டி­யிட்ட தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி கைப்­பற்­றி­யது. கூட்­டணி நிறுத்­திய தவி­சா­ளர் வேட்­பா­ளரை ஈ.பி.டி.பி. ஆத­ரித்­தது. இது தொடர்­பில் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு கூறி­னார்.

“நகர சபையை முன்­னர் ஆட்சி செய்த கூட்­ட­மைப்­புச் சரி­யா­கச் செயற்­ப­ட­வில்லை. யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை மற்­றும் நெடுந்­தீ­வுப் பிர­தேச சபை­யில் எமது கட்­சிக்கு அநீதி இழைத்த தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை பழி­வாங்­கும் செயற்­பா­டா­கத்­தான் இத­னைப் பார்­கின்­றோம்”- என்று அவர் கூறி­னார்.

நெடுந்­தீவு பிர­தேச சபை­யில் ஈ.பி.டி.பி. கூடிய ஆச­னங்­க­ளைப் பெற்­றி­ருந்­த­போ­தும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஆட்­சி­யைக் கைப்­பற்­றி­யது.