ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் அவசர அறிவுறுத்தல்

விமான புறப்படும் நேரத்திற்கு மூன்று மணிநேரங்களுக்கு முன்பாக விமான நிலையத்திற்கு வருகைத் தருமாறு, ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானச் சேவை நிறுவனம் பயணிகளுக்கு அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

பயணிகள் எதிர்நோக்கக் கூடிய தாமதங்களை தவிர்த்துக் கொள்ளும் வகையில் இன்று வழங்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தலானது, மறு அறிவித்தல் வரை நீடிக்கவுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாகவே பயணிகளுக்கு இந்த அசௌகரியம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.