நாய்கள் பிடிக்கும் வேலையை கைவிட்டது கொழும்பு மாநகர சபை

நாய்கள் பிடிக்கும் வேலையை கைவிட்டது கொழும்பு மாநகர சபை

கொழும்பு மாநகரசபையில் வெற்றிடமாகியிருந்த நாய் பிடித்தல் மற்றும் நாய்களை அழித்தல் தொடர்பான பதவிகளுக்கு ஆட்களை இணைத்துக் கொள்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சமூகவலைத்தளங்களில் இதற்கு எதிர்ப்புகள் தெரிக்கப்பட்டு வருவதால், அதனை கருத்திற் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கொழும்பு மாநகர சபையின் நகர ஆணையாளர் லலித் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த பதவிகள் உள்ளிட்ட 9 பதவிகளுக்கு ஆள்களை சேர்த்துக் கொள்வது தொடர்பான, விளம்பரங்கள் கடந்த வாரம் பத்திரிகைகளில் வெளியாகியிருந்தன.

எனினும், சமூக வலைத்தளங்கள் ஊடாக கொழும்பு மாநகரசபை விலங்குகளை கொள்வதாக, குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் நாய்களை கொல்வதற்கான பதவிகளுக்கு யாரையும்

இணைத்துக் கொள்ளவில்லை என்று நகர ஆணையாளர் லலித் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.