யாழில் இன்றும் சற்றுப் பதற்றமான சூழல்

யாழில் இன்றும் சற்றுப் பதற்றமான சூழல்

இந்த விடுதி அனைத்து அனுமதிகளும் பெற்றுக் கட்டப்படுகின்றது என்று கூறப்படுகின்றது. அங்கு விடுதி அமைப்பதற்கு அங்குள்ள முஸ்லிம் மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம், ஒஸ்மானியாக் கல்லூரிக்கு அண்மையில் ஹலீமா வீதியில் விடுதி அமைக்கும் பணிக்கு அந்தப் பகுதி மக்கள் நேற்று எதிர்ப்புக் காட்டினர்.

இரு தரப்பினருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இரு தரப்பினரையும் பொலிஸ் நிலையம் வருமாறு அறிவுறுத்தினார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடுதி அனைத்து அனுமதிகளும் பெற்றுக் கட்டப்படுகின்றது என்று கூறப்படுகின்றது. அங்கு விடுதி அமைப்பதற்கு அங்குள்ள முஸ்லிம் மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

சில வாரங்களுக்கு முன்னர் முஸ்லிம் மக்களின் எதிர்ப்பால் விடுதி அமைக்கும் நடவடிக்கைகள் தடைப்பட்டன. யாழ்ப்பாணம் மாநகர சபையினர் கட்டுமானப் பணிகளை இடைநிறுத்துமாறு உத்தரவிட்டிருந்தனர்.

நேற்று மீளக் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அந்தப் பகுது முஸ்லிம் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இரு பகுதியிருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது.

அதையடுத்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இரு தரப்பினரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துள்ளார்.