இராணு­வம் மீதான பார்­வையை மாற்­றி­யது விசு­வ­மடு சம்­ப­வம்

இரா­ணு­வத்­தி­ன­ரும் மனி­தா­பி­மா­னம் கொண்­ட­வர்­களே. இரா­ணுவ அதி­கா­ரி­களை இட­மாற்­றம் செய்­யக் கோரிப் போராட்­டம் நடத்­திய காலம் மாறி, இப்­போது இட­மாற்­றம் பெற்­றுச் செல்­லும்­போது கண்­ணீர் விட்­ட­ழும் நிகழ்­வு­கள் நடக்­கின்­றன. இது பன்­னாட்டு ரீதி­யில் பேசு­பொ­ரு­ளா­கி­யுள்­ளது.

இவ்­வாறு கல்வி இரா­ஜாங்க அமைச்­சர் வே.இரா­தா­கி­ருஸ்­ணன் தெரி­வித்­தார்.

வவு­னியா, புதுக்­கு­ளம் கனிஸ்ட வித்­தி­யா­ல­யத்­தில் நேற்று கற்­றல் வள நிலை­யக் கட்­ட­டம் திறக்­கப்­பட்­டது. அதில் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

அவர் தெரி­வித்­தா­வது,விஸ்­வ­ம­டு­வில் கட­மை­யாற்­றிய கேணல் ரத்ன பிரி­ய­பந்து இட­மாற்­றம் பெற்­றுச் சென்­ற­போது நடந்த நிகழ்வு ஒரு பேசு­பொ­ரு­ளா­கி­யுள்­ளது. அதற்­குக் கார­ணம் வடக்கு மக்­கள் மத்­தி­யில் அவர் தனக்­கென ஒரு இடத்­தைத் தக்­க­வைத்­துள்­ளார்.

30 ஆண்டு காலப் போரில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கும், போரா­ளி­க­ளுக்­கும் அவர் தன்­னா­லான பல சேவை­க­ளைச் செய்­துள்­ளார். சிவில் பாது­காப்­புத் திணைக்­க­ளத்­தின் ஊடாக வேலை வாய்ப்­புக்­கள் பெற்­றுக் கொடுத்­துள்­ளார்.

மக்­க­ளின் பொரு­ளா­தா­ரத்தை மேம்­ப­டுத்த சுய­தொ­ழில் வாய்ப்­புக்­களை உரு­வாக்­கி­யுள்­ளார். மாண­வர்­க­ளின் கல்­விக்கு உதவி செய்­துள்­ளார் எனப் பல­த­ரப்­பட்­ட­வற்றை அவர் செய்­துள்­ளார்.

படை அதி­கா­ரி­கள் போர் செய்­ப­வர்­கள் மட்­டு­மல்ல, அதற்கு அப்­பால் சென்று மனி­தா­பி­மான ரீதி­யில் என்ன செய்ய முடி­யும் என்­ப­தைக் காட்­டி­யுள்­ளார். இதை அனை­வ­ரு் பின்­பற்­றி­னால் போரில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளின் வாழ்க்­கை­யில் பெரும் மாற்­றத்தை ஏற்­ப­டுத்த முடி­யும்.

இவ­ரு­டைய செயற்­பாட்­டின் மூல­மாக நல்­ல­தொரு முன்­னு­தா­ர­ணம் கிடைத்­துள்­ளது. இவ­ரு­டைய இந்த சேவை நல்­லாட்­சிக்கு கிடைத்த ஒரு வெற்­றி­யா­கவே நான் கரு­து­கி­றேன். தற்­போது பல அரச அதி­கா­ரி­கள் சுற்று நிரு­பத்­துக்கு வெளி­யில் சென்று வேலை செய்ய விருப்­பு­வ­தில்லை.

அர­சின் ஊடாக அபி­வி­ருத்தி நடக்­கின்­ற­போது அதைச் செயற்­ப­டுத்­து­வ­தற்கு அந்­தந்­தப் பகு­தி­க­ளில் இருந்­கும் மக்­கள் பிர­தி­நி­தி­கள் தங்­க­ளது முழுப் பங்­க­ளிப்­பை­யும் வழங்க வேண்­டும்.

அதை­வி­டுத்­துக் குறை கூறிக் கொண்­டி­ருப்­ப­தால் எதை­யும் சாதிக்க முடி­யாது. வடக்கு மக்­க­ளுக்கு தற்­புாது அபி­வி­ருத்தி என்­பது இன்­றி­ய­மை­யா­தது.- என்­றார்.