இன, மத பேத­மற்று பய­ணம் தொட - காதர் மஸ்­தான்!!

போரால் படு மோச­மா­கப் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு அவர்­க­ளின் வாழ்வு சிறக்க இன, மத பேதங்­க­ளுக்கு அப்­பால் நின்று அர்ப்­ப­ணிப்­பு­டன் செயற்­ப­டு­வேன் என்று வன்னி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் புனர்­வாழ்­வ­ளிப்பு மீள்­கு­டி­யேற்ற, வடக்கு அபி­வி­ருத்தி மற்­றும் இந்து சமய கலா­சார பிர­தி­ய­மைச்­ச­ரு­மான காதர் மஸ்­தான் தெரி­வித்­தார்.

பிரதி அமைச்­ச­ரா­கப் பத­வி­யேற்ற பின்­னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி­வித்­தா­வது-,

எனக்கு இந்­தப் பத­வியை தந்த இறை­வ­னுக்கு நன்­றி­க­ளைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன். எமது மக்­கள் போரின் கோர வடுக்­க­ளி­லி­ருந்து இன்­னும் மீள முடி­யா­ம­லி­ருப்­பதை நான் அறி­வேன்.அவர்­க­ளின் வாழ்வு சிறக்க வாழ்­வா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப எனது இந்த பிர­தி­ய­மைச்­சுப் பத­வி­யின் அத்­தனை அதி­கா­ரங்­க­ளை­யும் பாவிப்­பேன்.

என்னை நம்பி வாக்­க­ளித்த மக்­க­ளுக்கு நன்­றி­க­ளைக் கூறும் இவ்­வே­ளை­யில் அந்த மக்­க­ளி­ன­தும் எனது மாவட்ட மக்­க­ளி­ன­தும் பல்­வே­று­பட்ட தேவை­க­ளை­யும் நிறை­வேற்ற வேண்­டிய கட­மைப்­பாடு எனக்­குண்டு என்­ப­தை­யும் தெரி­வித்­துக் கொள்­கி­றேன் – என்­றார்.