ஞானசார தேரருக்கு நாளை தண்டனை

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கான தண்டனை நாளை அறிவிக்கப்படவுள்ளது.

ஞானசார தேரர் குற்றவாளி என கடந்த 24 ஆம் திகதி ஹோமாகாம நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இந்த நிலையில் ஹோமாகமக நீதிவான் உதேஷ் ரணதுங்க, அவருக்கு எதிரான தண்டனையை நாளை அறிவிக்கவுள்ளார்.

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்யா எக்னெலிகொடவை, ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் வைத்து அச்சுறுத்தியமை தொடர்பில் ஞானசார தேரருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.