கல்வி வேலைத்திட்டத்திற்கு பின்லாந்து அரசாங்கம் உதவி

இலங்கையில் முன்னெடுக்கப்படும் உறுதிசெய்யப்பட்ட 13 வருட கல்வி வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க பின்லாந்து அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது.

தொழிற்பயிற்சியை முன்னிலைப்படுத்தி கல்வியை வழங்குவதற்கான வேலைத்திட்டம் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பின்லாந்து பிரதிக்கல்வி அமைச்சர் பெற்ர் பெல்டோனஸ் மற்றும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போது பின்லாந்து அரசாங்கம் இத்திட்டத்திற்கு உதவ விருப்பம் தெரிவித்துள்ளது.