மஸ்தானுக்கு எதிராக நல்லூரில் ஆர்ப்பாட்டம்

இந்து மத விவ­கார பிரதி அமைச்­ச­ராக இந்து அல்­லாத ஒரு­வர் நிய­மிக்­கப்­பட்­ட­மைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நல்­லூர் கந்­த­சு­வாமி ஆல­யத்­திற்கு முன்­பாக தற்போது ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இந்து விவ­கார பிரதி அமைச்­ச­ராக காதர் மஸ்­தான் நேற்று அரச தலைவர் மைத்திரிபாலவால் நியமிக்கப்பட்டார்.

இந்த நியமனத்துக்கு எதிராகவே ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

அகில இலங்கை சைவ மகா சபை ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. அதில் இந்து சமயப் பிரதிநிதிகள், மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அமைப்புக்கள் கலந்து கொண்டுள்ளனர்.