கோட்டாபயவின் குடியுரிமை ரத்து ஆவணத்தை வெளியிடுக- கம்மம்பிலவிடம் நவீன்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாப ராஜபக்ஷ தனது அமெரிக்க பிரஜாவுரிமையை ரத்து செய்தமை குறித்து நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

2020 இல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கோட்டாப ராஜபக்ஷ தனது அமெரிக்க பிரஜாவுரிமையை ரத்து செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மம்பில குறிப்பிட்டிருந்தார். இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையிலேயே நவீன் திஸாநாயக்க இவ்வாறு கூறியிருந்தார்.

கோட்டாப ராஜபக்ஷ அவ்வாறு வெளிநாட்டு குடியுரிமையை ரத்து செய்திருந்தால் அதற்காக வழங்கப்படும் ஆவணங்களை மக்களுக்கு வெளியிட வேண்டும். அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்து வழங்கப்படும் சான்றிதழை உச்ச நீதிமன்றத்துக்கு தெரிவித்து, நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.