கிழக்கு பல்கலைக்கழக மாணவி சடலமாக கண்டெடுப்பு! வெளியான திடுக்கிடும் காரணம்..

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா பகுதியல் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று மாலை தூக்கில் தொங்கிய நிலையில் கிழக்கு பல்கலைக்கழக மாணவி ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

நாவற்குடா கிழக்கு, 4 குறுக்கு வீதி விவேகானந்தபுரம் பகுதியில் உள்ள வீட்டில் வாடகைக்கு இருந்த, கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி விபுலானந்தா இசைநடன கல்லூரியில் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர் .

உயிரிழந்த யுவதி வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காக்காச்சிவட்டை மண்டூர் பாடசாலை வீதியை சேர்ந்த சங்கரத்துரை பானுஜா என்ற 22 வயதுடைய மாணவி என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த மாணவி கல்லடி விபுலானந்த இசைநடன கல்லூரியில் கட்புலன் திறன் நுட்ப துறையில் இரண்டாம் வருடத்தில் கல்வி பயின்று வருகின்றதாக பொலிசார் தெரிவித்தனர் .

இவரது மரணம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட குற்றத டயவியல் பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருவதோடு, மரணம் தொடர்பான பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியதாவது

கிழக்கு பல்கலைக்கழகத்தில் அழகியல் கற்கைநெறி பிரிவில் கல்வி கற்று வரும் நிலையில் இவருடைய காதலன் கட்டார் நாட்டில் தொழில் புரிந்து வரும் நிலையிலும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட முரண் பாட்டை அடுத்தே சம்பவம் நிகழ்ந்து இருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணை களின் இருந்து தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.