சைக்கிள் போட்டியில் கலந்துகண்ட வெளிநாட்டவருக்கு ஏற்பட்ட விபரீதம்

மகாவலி கங்கையில் தவறி வீழ்ந்து வெளிநாட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது.

சைக்கிள் ஓட்டப்போட்டியின் இடையே நேபாள நாட்டைச் சேர்ந்த குறித்த நபர் மகாவலி கங்கையில் தவறி வீழ்ந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மினிபே பாலம் ஊடாக பயணித்துக் கொண்டிருந்த வேளை, மகாவலி கங்கையில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.