இவர் வந்தால் பிக்பாஸ் வீட்டில் பிரளயமே வெடிக்குமா? கமல் சொன்னது இவரை தானா?

பிக் பாஸ் வீட்டிற்கு இவர் வந்தால் வீடு ரணகளமாகிடுமே என்று கமல் சொன்னது இவரை தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிபரப்பாக உள்ளது. கமல் ஹாஸன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கப் போகிறவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள மக்கள் ஆவலாக உள்ளனர்.இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு ஒரு தம்பதி செல்வது தெரிய வந்துள்ளது.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் டி.ஆர்.பி.யை ஏற்ற யார் உதவுவார்கள் என்று பார்த்து பார்த்து ஆட்களை தேர்வு செய்கிறார்கள். பவர் ஸ்டார் சீனிவாசன், மும்தாஜ் ஆகியோரால் நிச்சயம் டி.ஆர்.பி. ஏறும் என்று நம்பப்படுகிறது.

எலியும், பூனையும் போன்று சண்டை போட்டு பிரிந்து காவல் நிலையம் வரைக்கும் சென்ற நடிகர் தாடி பாலாஜி, அவரின் மனைவி நித்யா ஆகியோர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்களாம்.

தாடி பாலாஜி தன் நடத்தை மீது சந்தேகப்பட்டு அடித்துக் கொடுமைப்படுத்தியதாக நித்யா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் பாலாஜி தன்னையும், தன் மகளையும் கொலை செய்ய முயன்றதையும் வீடியோ எடுத்து வெளியிட்டார் நித்யா.

கொலை முயற்சி வரை பாலாஜி சென்றதாக கூறிய நித்யா பிக் பாஸ் வீட்டிற்கு வருவது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இவர் வந்தால் வீடு ரணகளமாகிவிடும் என்று கமல் சொன்னது தாடி பாலாஜி, நித்யாவை தானோ?

தாடி பாலாஜி, நித்யாவால் பிக் பாஸ் வீட்டில் ரணகளம் நடக்கும் என்று ரசிகர்கள் நினைக்கிறார்கள். அந்த ரணகள பார்ட்டி இவர்கள் தானா இல்லை இதை விட ரணகளப்படுத்த வேறு யாரையாவது அழைத்து வருகிறார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.