விகாராபதி மீது துப்பாக்கிச் சூடு! சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்

கதிர்காமம், கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி மீதான துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் முதன்மைச் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் இனங்காணப்பட்டுள்ளார்.

முதன்மைச் சந்தேக நபராக மஹாசென் ஆலயத்தின், முன்னாள் கப்புராளையான போப்பே கெதர அசேல லக்ஸ்மன் பண்டார என்பவரே பொலிஸாரால் இனம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார். சந்தேக நபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது வாள் உட்பட பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.