இலங்கையில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் போது காப்புறுதி நஷ்ட ஈட்டை பெற்றுக்கொள்வதற்கு புதிய நடை முறை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

விபத்து தொடர்பாக பொலிஸாருக்கு அறிவித்து அது தொடர்பான அறிக்கையை பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே காப்புறுதி நஷ்ட ஈட்டை இனி பெற்ற முடியும்.

வாகனம் மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பாக பொலிஸ் பணிப்பாளர் இதனை தெரிவித்துள்ளார்.

2018 இலக்கம் 18 என்ற சட்டத்தின்படியே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

விபத்து இடம்பெற்ற இடத்தில வைத்து காப்புறுதி நிறுவன பிரதிநிதியொருவர் நஷ்ட ஈட்டை (On The Spot) பெற்றுக்கொடுக்கும் போது இனி அது தொடர்பான படிவமொன்றினூடாக பொலிஸாருக்கு அறிவித்து அறிக்கையை பெற்றுக்கொள்ள வேண்டும்.

எதிர்காலத்தில் வாகன விபத்துக்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக முறைமையை தயாரிப்பதற்காகவே இந்த திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.