கல்யாணத்திற்காக யாழ்ப்பாணம் வரும் நாமல் ராஜபக்‌ஷே

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷே இன்று யாழ்ப்பாணத்திற்கு தனிப்பட்ட பயணம் மேற்கொள்கிறார். நண்பர் ஒருவரின் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காகவே அவர் யாழ் செல்கிறார்.

இன்று முற்பகல் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் வழிபாடொன்றிலும் அவர் கலந்து கொள்வார்.

ஆட்சி மாற்றம் இடம்பெற்றதையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்வது இது முதல் முறையென்பது குறிப்பிடத்தக்கது.