இலங்கை ஜனாதிபதியின் ஆவசர தீர்மானம் அதிர்ச்சியில் கைதிகள்:19 பேருக்கு மரணதண்டனை

தொடர்ச்சியாக போதைப்பொருள் தொடர்பான பாரிய குற்றங்களில் ஈடுபட்ட 19 பேருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்தியுள்ளதாக அரச தகவல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான குற்றவாளிகளுக்கு மாத்திரம் மரண தண்டனை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இந்நிலையில் போதைப்பொருள் தொடர்பான 19 பேருக்கு மட்டும் மரணதண்டனை நிறைவேற்ற அனுமதி வழங்கியுள்ளது.

மற்றும் 19 பேரும் இனம்காணப்பட்டுட்ள்ளனர், அவர்களிற்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது குறித்த ஆவணத்தில் ஜனாதிபதி கைச்சாத்திடவுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அமைச்சர் கூறுகையில் இந்த முடிவு போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் அதிகரிப்பதை கட்டுப்படுத்துவதற்காக தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது என அமைச்சர் கூறினார்.